பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - கன்னி

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - கன்னி

கால சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி தன்னை மாற்றி கொள்ளும் கன்னி ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குருவின் பார்வை படுவதும், குரு அட்டம ஸ்தானத்தில் அமர்வதும், பொருளாதாரத்தில் சில சிக்கல் உண்டானாலும்.. உங்களின் செயல்களாலும், எதிர்பார்ப்புகளாலும் உங்களின் வருமானத்தை தீர்வு செய்து கொள்வீர்கள். போட்டிகளில் எதையும் சந்தித்து திறமையை வெளிகாட்டுவீர்கள். பாதியில் நின்ற காரியங்கள் செயல்பட துவங்கும். ஆறாமிட சனி உங்களுக்கு யோகத்தை தருவதும், உடல் நலனின் சிலருக்கு இருந்து வந்த வருத்தம் நீங்கி மேன்மையை பெறுவம் வாய்ப்பு அமையும். அரசியலில் நல்ல ஆலோசகராக இருப்பீர்கள். ஆராய்ச்சிகளில் புதிய யுக்தியை கையாண்டு மேன்மை பெறுவீர்கள். கலைதுறையில் பாடல், எடிட்டிங், வசனகர்த்தாக்கள் பாராட்டும், பரிசும் பெறுவீர்கள். ஆசிரியர் பணி சிறக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
14-02-2024 புதன் மாலை 04.42 முதல் 16-02-2024 வெள்ளி இரவு 08.26 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

உத்திரம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
விளையாட்டுத் துறையிலும், உத்தியோகத்திலும் சிறந்து விளங்குவீர்கள். அமைதியான சூழ்நிலை உருவாக்கி பாடுபடுவீர்கள். பணபுழக்கம் இருக்கும்.
 
ஹஸ்தம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
அரசியல் வாழ்க்கையில் ஏற்றம் பெறுவீர்கள். காரியத்தில் கவனம் செலுத்தி மேன்மை பெறுவீர்கள். உடல் நலனில் சற்று வருத்தம் இருந்தாலும்.. சரியாகும்.
 
சித்திரை 1, 2 ஆம் பாதங்கள்:
 
சில விடயங்களில் முன்னோக்கி செல்லும் யுக்தியுடன் செயல்படுவீர்கள். விளையாட்டுத் துறையில் வெற்றி பயணம் செய்து வளம் பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
பச்சை, சிவப்பு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வெள்ளி, சனி, ஞாயிறு.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் வைரவரையும், வியாழன் கிழமைகளில் நவகிரக குருவையும் தீபமேற்றி வணங்கினால்.. உங்களின் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும்.